Saturday, March 3, 2018

சோழர்களுக்கும் பல்வர்களான வன்னிய காடவர்களுக்குமான திருமணத் தொடர்பு

வன்னிய குல க்ஷத்ரிய மன்னர்களான
===================================
காடவராயர்களிடம் சோழ மன்னர்கள் 
===================================
கொண்டிருந்த மிக மிக நெருங்கிய திருமணஉறவு
==============================================


கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த சோழ குல சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள், பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்கப் பல்லவனை தனது "மைத்துனர்" (மச்சான், Brother-in-law) என்று குறிப்பிடுகிறார்கள்.  எனவே அவர் வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனின் சகோதரியை திருமணம் செய்திருக்கிறார்கள் என்பது உண்மையாகிறது.

மேலும், சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் தனது மகளை, தனது "மச்சான்" சகல புவனச் சக்கரவர்த்திகள் காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனுக்கு தங்களது குல தெய்வக் கோயிலான "சிதம்பரம் நடராஜ பெருமான்" கோயிலில் வைத்து திருமண செய்து கொடுத்தார்கள்.  எனவே பள்ளி குல வேந்தன் காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவன் அவர்கள், சோழ குல சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு "மாப்பிள்ளை" (Son-in-law) ஆவார்கள்.

மேலும் சோழ குல சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகளுக்கும், பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனுக்கு பிறந்த மகளை, மூன்றாம் ராஜேந்திர சோழன் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். 

இந்த வன்னிய குல காடவராயர்களுடன் சோழர்கள் கொண்ட  திருமண தொடர்பு என்பது பிற்காலச் சோழ பேரரசை தோற்றுவித்த விஜயாலய சோழனின் மகனான ஆதித்த சோழனின் காலத்தில் இருந்தே இருந்துவந்திருக்கிறது.  பல்லவ அரசி "காடுவெட்டிகள் திருபுவனமாதேவி வயிரியக்கன்" என்ற வன்னிய குல க்ஷத்ரிய மங்கையை ஆதித்த சோழன் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.  இவர்களுக்கு பிறந்த மகனே "முதலாம் பராந்தக சோழன்" ஆவார்கள்.  மேலும் முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசிகள் "பல்லவ கம்பமாதேவி" மற்றும் "காடவ மாதேவி"  ஆகியோர் வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

எனவே இத்தகைய மிக மிக மிக நெருங்கிய திருமணமுறையை வைத்து பார்க்கும் போது வன்னியர்கள் தான் சோழர்கள் என்பது முற்றிலும் உண்மையாகிறது.  சோழ வேந்தன் மூன்றாம் ராஜராஜ சோழனை சிறைப்படுத்திய காடவராயன் கோப்பெருஞ்சிங்க பல்லவன் அவர்கள்,  அவனை "வன்னிய மணாளன்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள்.  அதாவது "வன்னிய மாப்பிள்ளை" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள். 

இந்த மூன்றாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகனாவான்.  ஆதாவது பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்கனின் "மச்சான்" ஆவார்.  எனவே தான் அவர் கல்வெட்டில் "வன்னிய மணாளன்" (சோழ மாப்பிள்ளை) என்று குறிப்பிடுகிறார்கள்.  இதன் மூலம் "வன்னிய என்பது சோழன்" என்பது உறுதியாகிறது.  இந்த மிக மிக முக்கியமான சான்று என்பது, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதை 100% சதவீதம் உறுதிசெய்கிறது.   

மாமன் மச்சான் பட்டியல் 
========================





"மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மச்சான் (மைத்துனர்) , காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவன் ஆவார்கள்".

"மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மருமகன்,  காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவன் ஆவார்கள்".

"மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகன் மூன்றாம் ராஜராஜ சோழன் அவர்கள், காடவராய கோப்பெருஞ்சிங்கனின் மாப்பிள்ளை   (மணாளன்) ஆவார்கள்".

"காடவராய கோப்பெருஞ் சிங்கனின் மகள் மீட்டாண்டார் நாச்சியார், மூன்றாம் ராஜேந்திர சோழனின் பட்டத்தரசி ஆவார்கள்.  அதாவது, மூன்றாம் ராஜேந்திர சோழனுக்கு காடவராயன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் மாமா (மாமனார்) ஆவார்கள்". 

இப்படி சான்றுகள் மிக மிக தெளிவாக "மாமன் மச்சான்" உறவு முறையை சொல்லும்போது, சிலர் தாங்கள் தான் சோழர்கள் என்று வீண் ஜம்பம் மற்றும் வேடிக்கைகளை செய்கிறார்கள்.  அத்தகையோர் அன்றைய காலகட்டத்தில் "சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனையின் நுழைவு வாயிலில் சென்று வருவதற்கே அனுமதி வாங்கியிருப்பார்கள்" என்பது குறிப்பிடதக்கதாகும்.  ஆனால் இன்று அவர்கள் வரலாறு பேசுவதை பார்த்தால் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.  எல்லாம் காலத்தின் கோலமாகும்.


No comments:

Post a Comment